BMW காரை விற்று விவசாயத்திற்கு நிதி அளித்த கன்னட நடிகர்!!
சமூக அக்கறை கொண்ட நடிகர் சுதீப் விவசாயிகள் நலன் கருதி தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை விற்றார்.
நடிகர் சுதீப், தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை விற்று விவசாயிகளுக்கு நிறுவன நிதியளித்துள்ளார்.
தமிழில் வெளியான ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக அறிமுகம் ஆன நடிகர் சுதீப். இந்தப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வெளிவந்த ‘புலி’, ‘பாகுபலி’ ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழில் இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
இந்நிலையில் சமூக அக்கறை கொண்ட இவர் கன்னட விவசாயிகள் நலன் கருதி தன்னுடைய பிஎம்டபிள்யூ காரை விற்று உதவி உள்ளார்.