தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் ஒன்று கூடிய விரைவில் முடிவுக்கு வருகின்றன. அவை என்னென்ன தெடர்கள் தெரியுமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எத்தனை தொலைக்காட்சி சேனல்களின் வருகை இருந்தாலும் முன்னோடியாக இருக்கும் சன் டிவியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்ட தொலைக்காட்சி சேனல் என்றே சொல்ல வேண்டும். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் காலம் காலமாக முன்னிலை இடத்தை பிடித்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங் வரிசையில் தொடர்ந்து முதல் இடத்திலிருந்து வருகிறது சன் டிவி சீரியல்கள். அதே சமயத்தில் டிஆர்பி ரேட்டிங் குறைவாக இருக்கும் சீரியல்களை முடிவுக்கு கொண்டு வருவதும் அதற்கு பதிலாக புதிய சீரியல்களின் வருகையும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் குறைவான டிஆர்பி ரேட்டிங் கொண்ட சீரியல் ஒன்று தற்போது ஒரேடிவயாக முடிவுக்கு வரப் போகிறது.


மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியலுக்கு வருவார்... ரஜினி வர மாட்டார்... ஜோசியர் சொல்லியதை நினைவுகூர்ந்த நடிகர்!| 


மிஸ்டர் மனைவி:
நடிகை ஷபானா, பவன் ரவீந்திரா, அம்மு ராமச்சந்தர், லதா உட்டோரின் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'Mr. மனைவி'. கிராமத்து பெண்ணை சுற்றிலும் நகரும் கதைக்களத்துடன் சமீபத்தில் தொடங்கிய 'சிங்கப்பெண்ணே' என்ற சீரியலின் வருகையால் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'Mr. மனைவி' தொடர் இரவு 10.00 மணிக்கு மாற்றப்பட்டது. அதனால் இந்த சீரியலும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியாமல் போனது. இதன் டிஆர்பி ரேட்டிங்கும் குறைவாக உள்ளதால் விரைவில் 'Mr. மனைவி' சீரியலும் முடிவுக்கு வரவுள்ளது.



எதிர்நீச்சல் சீரியல் நிலை என்ன?
இதனிடையே பல மாதங்களாக டிஆர்பி வரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்த 'எதிர்நீச்சல்' சீரியல் கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. நடிகர் மாரிமுத்துவின் இறப்பு தான் அதற்கு காரணமாக ரசிகர்கள் கருதுகிறார்கள். அதனால் கதைக்களத்தில் தொய்வு ஏற்பட்டதால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டியது. ஆனால் மீண்டும் முழுவீச்சில் முன்னணி இடத்தை நோக்கி பயணித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக மீண்டும் பரபரப்பான கதைக்களத்துடன் முன்னேறி வருகிறது எதிர்நீச்சல் தொடர்.


கலக்கும் கயல் சீரியல்:
மறுபுறம் கயல் சீரியல் பற்றி பேசுகையில், இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்டில் 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டிஆர்பி பட்டியல்:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் இடத்தை பிடித்த சீரியல் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதில் முதல் இடத்தில் விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 9.1 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் 8.4 புள்ளிகளுடனும், சிங்கப்பெண்ணே சீரியல் மூன்றாவது இடத்தை 8.2 புள்ளிகளுடனும், பிடித்துள்ளது. நான்காவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் 8.1 புள்ளிகளுடனும், ஐந்தாவது இடத்தை கயல் சீரியல் 8 புள்ளிகளுடனும் பிடித்துள்ளது. அதே போல ஆறாவது இடத்தை ஆஹா கல்யாணம் சீரியல் 7.7 புள்ளிகளுடனும், ஏழாவது இடத்தை இனியா சீரியல் 7.2 புள்ளிகளுடனும், எட்டாவது இடத்தை சுந்தரி ,மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7 புள்ளிகளுடனும், பத்தாவது இடத்தை மகாநதி சீரியல் 6.1 புள்ளிகளுடனும் பிடித்துள்ளது.


மேலும் படிக்க | பிக்பாஸ் 7: டேஞ்சர் லிஸ்டில் 2 முக்கிய போட்டியாளர்கள்! எவிக்ட் ஆவப்போவது யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ