தனது வாகன ஓட்டுநர் பற்றி மனம் திறந்தார் சன்னி லியோன்...
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது வாகன ஓட்டுநர் தனக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்!
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது வாகன ஓட்டுநர் தனக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்!
பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர்.
இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின், தனது கணவர் டேனியல் வெபரை திருமணம் செய்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார். அழகிய குடும்பத்திற்கு அடையாளமாக கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதற்கிடையில் இத்தம்பதியருக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தை பிறந்து குடும்பத்தின் மகிழ்சியினை மேலும் கூட்டியுள்ளது.
சமீப காலமகா சமூக ஊடகங்களில் பிஸியாக செயல்பட்டு வரும் இவர், தனது அடுத்த படம் ஒன்றின் ப்ரோமஷன் நிகழ்ச்சிக்காக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
அப்போது நிகழ்சி தொகுப்பாளர், உங்களுக்கு யாரேனும் தவறான குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனரா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சன்னி லியோன், ஆம் ஒரு முறை எனது வாகன ஓட்டுநர் எனக்கு தவறான குறுஞ்செய்தி ஒன்றினை அனுப்பினார், பின்னர் தான் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டதாக அவரே மன்னிப்பு கோரினார் என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் சன்னி வெளிப்படையான மனம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது என இணைய பிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.