பாலிவுட் பிரபலம் சன்னிலியோன் வாழ்க்கை வரலாற்றினை ZEE5 இணைய பக்கம் ஒளிபரப்பவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட் திரையுலகின் பிரபலமாணவர்களில் முக்கயமானவர் சன்னிலியோன். அவரது முகத்திற்கு பின்னால் பலதர விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவரது வாழ்க்கை பயணம் என்பது அவரக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை என்பதை யாரும் உணர தயாராக இல்லை.


பாலிவுட் திரைவுலகில் நுழைந்த பின்னர் விரைவிலே பெரும் புகழை அடைந்துவிட்டார் அவர். இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாற்றினை Zee குழுமத்தின் டிஜிட்டல் தளமான ZEE5 ஒளிப்பரப்பவுள்ளது. இதுகுறித்து சன்னிலியோன் அவர்களும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.



இந்தியா-கனடா அழகியான சன்னி லியோனின் இயற்பெயர் கரென்ஜித் ஆகும். இவர் ஆரம்பக்கட்டத்தில் பாலியல் தொடர்பான படங்களில் நடித்து வந்தார். பின்னர் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் கலந்துக்கொண்டார். இங்கு தான் அவர் இயக்குனர் மகேஷ் பாத் அவர்களுடன் பரிச்சையமானார்.


இவரின் உதவியால் விரைவிலேயே பாலிவுட் படங்களில் கால் பதித்தார். 2012-ல் Jism-2, ஜாக்பாட்(2013) ராகினி MMS 2 (2014), எக் பெஹெலே லீலா(2015) என திரைப்படங்களை அடுக்கிக்கொண்டு வந்தார்.


பின்னர் விலங்குள் பாதுகாப்பு பிரிவான peta-வின் விளம்பரதாரராகவும வடிவெடுத்து சேவைகள் பல புரிந்து வந்தார். பின்னர் டேனியல் வெபருடன் தன் திருமண வாழ்க்கையினை தொடங்கினார். சமீபத்தில் இத்தம்பதியருக்கு இரட்டை குழந்தை பிரந்தது குறிப்பிடத்தக்கது.