இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேட்ட படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுக்குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் சன் பிச்சர்ஸ் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.


இந்நிலையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு "பேட்ட" படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிம்ரன் இருக்கிறார்.