மாஸாக வெளிவந்துள்ள `எதற்கும் துணிந்தவன்` படத்தின் முதல் சிங்கிள்!
எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் சிங்கிள் வாடா தம்பி என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S.பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
ALSO READ | Actor Vijay: தளபதி 66-ல் இணைகிறீர்களா? பிரபுதேவா சொன்ன பதில் இதுதான்..!
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்' தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் பாடலுக்கு வரிகளை விக்னேஷ் சிவன் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மதம் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீடு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் இன்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
தற்போது முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுத, G.V.பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். "வாடா தம்பி" எனும் இந்த குத்து பாடலில் கிராமத்தான் கெட்டப்பில் சூர்யா மாஸாக ஆடியுள்ளார். இந்த பாடலானது துணிச்சலையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த பாடலின் BGM-ம் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. இந்த பாடல் சூர்யா ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
ALSO READ | "அன்பறிவு" படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்: Exclusive Update!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR