கோர்ட்ல நீதி கிடைக்கலைனா ரோட்ல எறங்கி போராடுவேன்! வெளியானது ஜெய் பீம் ட்ரைலர்!
சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெய் பீம் திரைப்படம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் ஜெய் பீம் திரைப்படம் அடுத்த மாதம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. கடந்த வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றதை அடுத்து தற்போது இதன் ட்ரைலர் வெளியாகி உள்ளது. பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. வக்கீலாக சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார்.
1995ல் நடக்கும் கதையாக ஜெய் பீம் காட்டப்படுகிறது. டீசரில் இடம் பெற்றது போலவே, ட்ரைலரிலும் தெறிக்க விடும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. நீதி கிடைக்கும் வரை போராடுவோம், Law is a very powerful weapon! யார காப்பாத்த நாம அத பயன்படுத்துறோம்குறது ரொம்ப முக்கியம், ஒரு ஆள் மேல ஒரு கேஸ் தான் போடனும்னு சட்டம் இருக்கா என்ன? , ஒரு உண்மைய சொல்றாங்கனா பல உண்மைகள மறைக்குறாங்கனு அர்த்தம், ஜனநாயகத்த நில நிறுத்தணும்னா சர்வாதிகாரத்த கைல எடுக்கணும், நீதிக்கெதிரான வார்த்தைகள விட அநீதிக்கெதிரான நீதிமன்றத்தோட மவுனம் ஆபத்தானதுனு ஒவ்வொரு வசனங்களும் ஆக்ரோஷமாக இருக்கின்றன.
நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. காவல்துறை மக்களுக்கு ஏற்படுத்தும் அநீதிகளையும் ஜெய் பீம் பேசும் என்று எதிர்பார்க்கலாம். அதிகாரவர்க்கத்திற்கு எதிராக போராடும் வக்கீலாக சூர்யா கொதித்து எழுகிறார். டீசர் மற்றும் ட்ரைலரில் காட்டப்படாத, பேசப்படாத நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளது என்று கூறப்படுகிறது. பிரகாஸ்ராஜ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். உண்மை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளதாக இயக்குனர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.
6 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 20 நிமிடம் முன்னதாகவே வெளியாகி உள்ளது ஜெய் பீம் ட்ரைலர்.
ALSO READ திருடன் இல்லாத ஜாதி இருக்கா? வெளியானது சூர்யாவின் ஜெய் பீம் டீஸர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR