சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம் படத்தின் டீஸர்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்".
இந்தப் படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான டீஸர் இன்று வெளியிட்டபடும் என்று விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “நானும் ரௌடி தான்” படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின்மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றது.
அனிருத் இசையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘நானா தானா’ மற்றும் ''சொடக்கு மேல சொடக்கு'' போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் வெற்றி பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்தில்‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் எழுதியுள்ளனர். மேலும், இந்த படத்ததினை வரும் திங்களன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது