கொலையா? தற்கொலையா? 3 ஆண்டுகள் கடந்து தீரா மர்மமாக இந்தி நடிகரின் மரணம்!
Sushant Singh Rajput Death:பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் தீர்க்கமுடியாமல் இருக்கிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020ஆம் ஆண்டு தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், இதுகுறித்த சி.பி.ஐ விசாரணை இன்னும் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கை இன்னும் சி.பி.சி.ஐடி அதிகாரிகள் முடிக்கவில்லை என கூறப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை:
இந்தியில், பல ஹிட் படங்களில் நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். சீரியல் நடிகராக இருந்து, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு பாலிவுட்டிற்குள் நுழைந்தவர் சுஷாந்த். இந்தியில் வெளியான பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் இருந்த இவர், நன்கு வளர்ந்து வந்த சமயத்தில் தூக்கு போடப்பட்ட நிலையில் தனது வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது மரணம் கொலையா? தற்கொலையா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
மேலும் படிக்க | ‘எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்..’ பிரபல நடிகருடனான காதலை உறுதி செய்த தமன்னா?
கொலையாக இருக்குமா?
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு போடப்பட்டது. அப்போது, அனைவரும் வீட்டில் முடங்கவேண்டிய நிலையில் இருந்தது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாந்த்ராவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். ஜூன் 14ஆம் தேதியன்று இவர், தூக்கில் தொங்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கை பதிவு செய்த போலீஸார் இது குறித்து சுஷாந்தின் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடமும் விசாரணை மேற்கொண்டனர். சில சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தயாரிப்பாளர்களும் கூட இந்த விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர். சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலைதான் என கூறப்பட்டது. ஆனால், இதை சுஷாந்தின் குடும்பத்தினர் நம்ப மறுத்துவிட்டனர். இதனால், சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரனை தொடர்ந்தது.
சுஷாந்தின் உதவியாளர் மரணம்:
சுஷாந்திற்கு பல நிகழ்ச்சிகளில் உதவியாளராக பணிபுரிந்த திஷா சாலியன் என்ற 28 வ்யது பெண், ஜூன் 8 ஆம் தேதி (சுஷாந்த் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு) 13ஆவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இவரது மரணம் எதிர்பாராத விபத்து என போலீஸார் அறிவித்தனர். ஆனால், சுஷாந்தின் மரணத்திற்கும் அவரது உதவியாளரின் மரணத்திற்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என பலரால் சந்தேகிக்கப்பட்டது.
காதலிதான் காரணமா?
சுஷாந்த் சிங் நடிகையும் மாடலுமான ரேஹா சக்ரபோத்தியை காதலித்து வந்தார். சுஷாந்த் சிங்கின் தந்தை, ரேஹாதான் சுஷாந்தை கொலை செய்திருப்பார் என கூறி அவர் மீது புகார் கொடுத்தார். இதையடுத்து, இவர் சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்துகள் சப்ளை செய்தது தெரியவந்தது. போதை மருந்துகள் கடத்திய குற்றத்திற்காக ரேஹா மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர் பெயிலில் வெளியில் வந்தார். சுஷாந்திற்கு மட்டுமல்லாது, இன்னும் சில பெரிய பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் ரேஹா போதை மருந்துகளை வழங்கியது தெரிய வந்ததால், இந்த வழக்கின் விசாரணையின் கோணமே மாற்றப்பட்டு விட்டது. ஆனால், இன்று வரை சுஷாந்த் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
சந்தேகத்தை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்:
சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அவர், வீட்டிலிருந்த ஸ்கரீன் துணியில் தூக்கப்போடப்பட்ட நிலையில் இருந்தார். அந்ததுணி மிகவும் கணமான பெரிதான துணியாக இருந்தது. ஆனால், அவரது கழுத்தில் இருந்த அடையாளமோ கயிறை வைத்து தூக்கு போட்டதை குறிப்பது போல இருந்தது. மேலும், சுஷாந்த் கடைசியாக தில் பேச்சரா என்ற படத்தில் நடித்திருந்தார், அதற்கு முன்னர் சிக்கோர் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில், தற்கொலை செய்து கொள்ளும் தனது மகனுக்கு அட்வைஸ் செய்யும் அப்பாவாக நடித்திருந்தார். இப்படம், அதுபோன்ற தற்கொலை எண்ணம் உள்ளவர்களுக்கு பாசிடிவ் அட்வைஸ் கொடுக்கும் வைகயில் எடுக்கப்பட்டிருந்தது. இதனால், சுஷாந்தின் ரசிகர்கள் அவர் தற்கொலை செய்துவிட்டார் என்ற போலீஸாரின் கூற்றை நம்ப மறுக்கின்றனர்.
மேலும் படிக்க | இந்திய அளவில் அதிக வசூல் சாதனை செய்த படம் எது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ