சுஷாந்த் சிங் சகோதரிகள் பிரதமர் மற்றும் அமித்ஷாவுக்கு வைத்த கோரிக்கை
சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உடற்கூராய்வு குழுவில் இருந்தவர் தெரிவித்திருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சுஷாந்த் சிங் சகோதரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாலிவுட் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் இருந்த அவரது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டார். தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான அவர், திடீரென தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இறந்தது முதல் இப்போது வரை அவரது குடும்பத்தினர், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க | சுஷாந்த் சிங்க் கொலை செய்யப்பட்டிருக்கலாம் - வெளியான அதிர்ச்சி தகவல்
இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை கூப்பர் மருத்துவமனையில் சுஷாந்த் சிங்கிற்கு உடற்கூராய்வு செய்த குழுவில் இருந்த ரூப்குமார் ஷா என்பவர் இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்து மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சுஷாந்த் சிங் உடலை பிரதேச பரிசோதனை செய்த குழுவில் தான் இருந்ததாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை, கொலை செய்யப்பட்டிருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது உடலில் கழுத்து மற்றும் பின்பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக காயங்கள் இருந்தபோதும், உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவை பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார். புகைப்படம் மட்டும் எடுத்துவிட்டு அவசர அவசரமாக சுஷாந்தின் உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினர். அவர் தெரிவித்திருக்கும் இந்த கருத்து பாலிவுட் சினிமா உலகில் மீண்டும் புயலைக் கிளப்பியுள்ளது. ரூப்குமார் ஷாவின் இந்த கருத்துக்கு, பதிலளித்துள்ள சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதற்கு இன்னும் ஒரு வலுவான ஆதாரம் கிடைத்திருப்பதாகவும், சிபிஐ மூலம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், உண்மையை கூறியிருக்கும் ரூப்குமார் ஷாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். சுஷாந்த் சிங்கின் மற்றொரு சகோதரியான பிரியங்காவும், சுஷாந்தின் மரணத்தில் இருக்கும் உண்மையை கண்டறிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தலையிட்டு ரூப்குமார் ஷாவின் பாதுகாப்பையும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் படிக்க | The Teacher : விவாதத்தை கிளப்பும் 'தி டீச்சர்'... மிரட்டும் அமலா பால்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ