சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னுக்கு தற்போது 42 வயது. ஆனால் திருமணம் செய்துக் கொள்ளாமல் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். நாகர்ஜுனாவுடன் இணைந்து தமிழில் ரட்சகன் படத்தில் நடித்தவர், முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் தோன்றினார். இவரது அழகுக்கும் நடிப்புக்கும் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். 


தற்போது பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில் தனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை சுஷ்மிதா நினைவுக் கூர்ந்துள்ளார். பிரபலங்கள் வெளியில் செல்லும் போது பலத்த பாதுகாப்பு இருக்கும், ஆனால் அதையும் மீறி பலர் தவறாக நடந்துக் கொள்ள முற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். 


6 மாதங்களுக்கு முன்பு ஒரு விருது வழங்கும் விழாவில் தான் கலந்துக் கொண்டப் போது 15-வயது சிறுவன் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டது சுஷ்மிதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். பின்னர் அவனே தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியதால், அவனது வயதைக் கருத்தில் கொண்டு அறிவுரைக் கூறி அனுப்பினாராம் சுஷ்மிதா சென்.