சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், ஸ்வாதி ரெட்டி. இவர், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமிய பெண்கள் பயன்படுத்தும் புர்காவை அணிந்து கொண்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்வாதி ரெட்டி:


தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நாயகி ஸ்வாதி ரெட்டி. ரஷ்யாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த இவர் ‘டேஞ்சர்’ என்ற படம் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தார். தமிழில் 2008ஆம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்க்கு காதலியாக நடித்து பிரபலமானார். இதையடுத்து அதே ஜெய்க்கு ஜோடியாக 2014ஆம் ஆண்டு ‘வடகறி’ என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு மற்றும் மலையாள உலகின் பிரபலமான ஹீரோக்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவரது சிங்கப்பல்லும், அழகான சிரிப்பும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். சிட்டி கேர்ள் கதாப்பாத்திரமானாலும் கிராமத்து நாயகி கதாப்பாத்திரமானாலும் அனைத்திற்கும் பொறுந்தி போகும் முகம் இவருக்கு உண்டு. 


மேலும் படிக்க | DD Returns Vs. LGM : ரசிகர்களை அதிகம் கவர்ந்த படம் எது..? தியேட்டரில் எந்த படத்தை பார்க்கலாம்..?


புர்கா அணிந்து பொது வெளியில்..


பொதுவாக பிரபங்கள் பொது இடங்களுக்கு அல்லது பொது வெளியில் இருக்கும் போது அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொள்வது இயல்பு. இதைத்தவிர்க்க சில பிரபலங்கள் மாறு வேடங்களில் எல்லாம் வந்து செல்கின்றனர். இதைத்தான் நடிகை ஸ்வாதி ரெட்டியும் செய்துள்ளார். 


ஸ்வாதி இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் புர்கா அணிந்தவாறு ரயில் நிலையத்திற்குள் அவர் செல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவுடன் அவர் தமிழ படமான ‘அன்பே சிவம்’ பட பாடலையும் இணைத்துள்ளார். வெளியான சில மணிநேரங்களிலேயே பல ஆயிரம் வியூஸ்களை கடந்து ரசிகர்களின் லைக்ஸ்களையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. 


விவாகரத்து செய்திகள்: 


நடிகை ஸ்வாதி, கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசு என்ற விமானியை காதலித்து வந்தார். இவர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது, இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். திருமணம் ஆன பிறகு, இவர் சினிமாவில் சில மாதங்கள் நடிக்காமல் இருந்தார். பின்னர் 2019ஆம் ஆண்டு ‘திருசூர் புரம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார். அடுத்து 2022ஆம் ஆண்டு ‘பஞ்சதந்திரம்’ என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்தார். இவர், தனது காதல் கணவரை பிரிய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியானது. இதற்கு முன்னர் 2020ஆம் ஆண்டும் இதே போன்ற செய்தி வெளியானது. அப்போது தனக்கு இந்த மாதிரியான வதந்திகள் எல்லாம் பிடிக்காது என கூறிவிட்டு ஸ்வாதி இன்ஸ்டாவில் இருந்து சில மாதங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார். 


வாய் திறக்காமல் இருக்கும் நடிகை..!


முன்னர் வெளியான விவாகரத்து சர்ச்சையின் போது கொதித்தெழுந்த ஸ்வாதி, தற்போது வெளியாகியுள்ள தகவல் குறித்து ஏதும் பேசாமல் இருக்கிறார். இதனால், இத்தகவல் உண்மைதானோ என்ற நிலைக்கே ரசிகர்கள் வந்துவிட்டனர். 


மேலும் படிக்க | Jailer Audio Launch LIVE: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடப்பது என்ன..? சுட சுட லைவ் அப்டேட்ஸ் இதோ..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ