மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் டி.ராஜேந்தர்
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் டி.ராஜேந்திர், மேல் சிகிச்சைக்காக வெளிநாடு இன்று வெளிநாடு செல்ல இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டிருக்கும் நடிகர் டி.ராஜேந்தருக்கு அண்மையில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் இருக்கும் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இதயத்தில் இருக்கும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதும், வயிற்றில் ரத்தக்கசிவு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த டி.ராஜேந்தர், மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் படிக்க | 100 கோடி 200 கோடிலாம் வேணாம்; ஸ்ட்ரைட்டா 400 கோடிதான்! வெறித்தன வசூலில் விக்ரம்!
இதனால், மேல்சிகிச்சைக்காக இன்று மாலை சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவர் வெளிநாடு செல்ல இருப்பதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ராஜேந்தருடன் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர். நடிகர் சிம்பு ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் அங்கு சென்று டி.ராஜேந்தருக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த டி.ராஜேந்தரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் நேரில் சந்தித்து பேசினார். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு நேரில் சென்ற மு.க.ஸ்டாலின், உடல்நலம் குறித்தும், இப்போது வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். தேவையான உதவிகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ராஜேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் சிம்பு நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்து தல படத்தில் சிம்பு நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | சூப்பர் மாடல் மீரா மிதுன் வழக்கு - முடித்து வைத்த நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR