இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் தலைவி மித்தாலி ராஜ்-ன் வாழ்க்கை படத்தில் நடிப்பதற்கு நடிகை டாப்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ் திரையுலகில் ஆடுகளம் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் டாப்ஸி பொன்னு. தமிழகத்தின் அடுத்து லைலா என அனைவராலும் கூறப்பட்ட இவர் தற்போது தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் பிஸியாக வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்.


இந்நிலையல் தற்போது இவர் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் தலைவி மித்தாலி ராஜ்-ன் வாழ்க்கை திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீராங்கனை என பெயர் பெற்ற மித்தாலி ராஜ், ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 6000 ரன்களை கடந்ந ஒரு வீராங்கனை எனும் பெயரினையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது வாழ்கையினை திரைப்படமாக எடுக்க Viscom 18 Motion Pictures உரிமம் பெற்றுள்ளது.


இந்த திரைப்படத்தில் டாப்ஸி நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து டாப்ஸியிடமே கேள்வி எழுப்பபட்டுள்ளது. இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் டாப்ஸி தெரிவித்துள்ளதாவது... இதுவரை அதற்கான ஒப்பந்தம் செய்யபடவில்லை, விளையாட்டுத் துறை சார்ந்த படங்களில் நடிப்பதில் நான் ஆர்வமாக இருக்கின்றேன்,. அந்த வகையில் டாப்ஸியின் வாழ்க்கை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பேன் என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து Viscom 18 Motion Pictures தெரிவிக்கையில்.. படத்திற்கான கரை இன்னும் உருவாக்கப்படவில்லை. கதைகளம் உருவாகிய பின்னர் படத்தில் இடம் பெறும் உறுப்பினர்கள் குறித்த தேடல் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.