துப்பாக்கி தோட்டாக்களுடன் சிக்கிய கருணாஸ்: விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் திரைப்பட நடிகரான, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் கைப்பையில் இருந்து, 40 துப்பாக்கி குண்டுகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவருடைய விமான பயணத்தை ரத்து செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை.
சென்னை விமான நிலையத்தில் திரைப்பட நடிகரான, முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் கைப்பையில் இருந்து, 40 துப்பாக்கி குண்டுகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவருடைய விமான பயணத்தை ரத்து செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று காலை சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்திற்கு, அனுப்பி கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் பிரபல திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவான கருணாஸ், இந்த விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய கைப்பையை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்கேன் மூலம் பரிசோதித்தனர். அப்போது அந்த கைப்பையில் வெடிபொருள் இருப்பதற்கான எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, கருணாஸிடம் விசாரித்தனர். ஆனால் கருணாஸ் அந்த கைப்பையில் ஆட்சேபகரமான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறினார்.
இதை அடுத்து கைப்பையை, பாதுகாப்பு அதிகாரிகள் திறந்து பார்த்து பரிசோதித்தனர். அதனுள் இரண்டு பாக்ஸ்கள் இருந்தன. அந்த பாக்ஸ்கள் ஒவ்வொன்றிலும், 20 துப்பாக்கி குண்டுகள் வீதம் மொத்தம், 40 லைவ் துப்பாக்கி குண்டுகள் இருந்தன. அவைகள் அனைத்தும் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய .32 எம் எம் ரக குண்டுகள் ஆகும். உடனடியாக துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கருணாஸிடம் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கருணாஸ், நான் துப்பாக்கி லைசென்ஸ் ஹோல்டர். என்னிடம் உள்ள கை துப்பாக்கியில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் இவைகள். விமானத்தில் குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடாது என்று விதி இருப்பது எனக்கு தெரியும். ஆனால் நான் அவசரமாக புறப்பட்டு வந்ததால், பையில் இருந்த துப்பாக்கி குண்டுகள் பாக்ஸ்களை, நான் கவனிக்கவில்லை என்று கூறினார். அதனால் தெரியாமல் பையில் இந்த குண்டுகள் இருந்து விட்டது என்று தெரிவித்தார். அதோடு தனது துப்பாக்கி லைசென்ஸ், அது புதுப்பித்த ஆவணங்கள் போன்றவைகளையும் காட்டினார்.
ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு விதிமுறைகளின் படி துப்பாக்கி குண்டுகளை விமானத்தில் எடுத்துச் செல்வது தவறு. எனவே உங்களை இந்த விமானத்தில் பயணிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதோடு, கருணாஸின் திருச்சி விமான பயணத்தையும் ரத்து செய்தனர். இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக இந்த விமானம் சுமார் அரை மணி நேரம் தாமதமாக இன்று காலை திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ