Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும்,  வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. 


இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது, “இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன், இந்தக்கதை இந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்றபோது, தியேட்டருக்கு வருபவர்கள், ஒரு புதுமையான அனுபவம் தர வேண்டும் என்றேன். பைலட் எடுத்து காட்டிய போது என்னை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டார். படம் முழுக்க நிறைய பிரம்மாண்டம் இருக்கிறது. கடலுக்குள் நடக்கும் காட்சி இருக்கிறது, கார் சேஸ், ப்ளைட் பைட், ஹிஸ்டாரிகல் காட்சிகள் என நிறைய இருக்கிறது. பாகுபலி அளவெல்லாம் முடியாது ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். கேமராமேன் சரியாக இருந்தால் தான் சிஜி சரியாக வரும், சந்துரு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். என் எதிர்பார்ப்புகளை புரிந்து இசையமைத்த ஆதர்ஷ்க்கு நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி” என்று கூறினார். 


 



தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, “நான் இந்த விழாவிற்கு வர முடியாத அளவு வேலை இருந்தது. அமர் டிரெய்லர் பாருங்கள் முடிந்தால் வாருங்கள்  என்றார். பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும்படியான படைப்பாக இருக்கும்.  அகஸ்டின் பிரபுவின் புது முயற்சி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்களிடம் இந்தப்படத்தை அறிமுகம் செய்துவிட்டு தியேட்டருக்கு கொண்டு வந்தால் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டு, படத்தை கொண்டு வாருங்கள்” என்று கூறினார். 


மேலும் படிக்க | அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ளாத பிரபலங்கள்! அஜித், விஜய், கமல்-லிஸ்ட் பெருசு!


நடிகர் அமர் பேசிய போது, “பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. சதுர் படத்தில் நடிகனாக அறிமுகமாவது மிகப்பெரிய பெருமை. ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன், படத்தில் என் பெயர் தமிழ், அதுவும் எனக்கு பெருமை. அகஸ்டின் சொன்ன படி படத்தை ஆரம்பித்தார். டிரெய்லர் படத்தின் கலைஞர்களின் திறமையை சொல்லும். நிறைய திறமையாளர்கள்  இப்படத்தில் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும்” என்றார். 


நடிகர் சூர்யா பேசுகையில்,  “இந்தப்படத்தில் ஒரு மெயின் ரோல் செய்துள்ளேன். இயக்குனர் டிரெய்லரை யாருக்குமே காட்டவில்லை, இங்கு தான் அனைவரும் பார்த்தோம். திருப்தியாக உள்ளது. எங்களுடன் இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்று கூறினார்.


மேலும் படிக்க | “வரலக்ஷ்மியின் முதல் காதல் நான் இல்லை..” தன் மனைவி குறித்து ஓபனாக பேசிய நிக்கோலாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ