தொலைக்காட்சி சீரியல்கள் இன்று நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக மாறிவிட்டன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல். சினிமாவுக்கு நிகரான கதையம்சம் கொண்ட மெகா சீரியல்களில் இதயம் சீரியலும் ஒன்று.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதயம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரத்னம் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல பாரதி ஆதிக்காக நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது தெரிந்துக் கொள்வோம்.


சாரதா வீட்டிற்குள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்க பவானி ஒரு வேலை இந்த பாரதியே கேக்கில் விஷத்தில் வச்சி அவளே சாப்பிட்டு நாடகம் போடுறாளோ என்று சந்தேகமாக இருப்பதாக சொல்ல அறிவு எனக்கும் அப்படி தான் அக்கா தோணுது என்று சொல்கிறாள். 



இதனையடுத்து இங்கு வரும் பாரதி உங்களுக்கு என்னை பிடிக்கல, அதனால் தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்றீங்கனு நினைச்சேன், ஆனால் ஆதி உயிரோட இருக்கிறதே இங்க சில பேருக்கு பிடிக்கல என்று சொல்ல சாரதா அப்போ இது கொலைகார குடும்பம்னு சொல்றியா என்று சத்தம் போடுகிறாள்.


மேலும் படிக்க | Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்


பாரதி  நான் அப்படியெல்லாம் சொல்லல, ஆதியை கல்யாணம் பண்ணிட்டு அவரை கொல்ல நினைக்கிறது யாருனு நான் கண்டு பிடிக்காமல் விட மாட்டேன் என்று சபதம் போட அதை கேட்டு எல்லாரும் ஷாக் ஆகின்றனர். 


இதனை தொடர்ந்து ஸ்வேதா ஆதிக்கு வேறொரு நம்பரில் இருந்து போன் செய்து உங்களுக்கு இதயம் குடுத்த குடும்பத்தை தானே தேடிட்டு இருக்கீங்க, அது யாருனு தெரியணும்னா இந்த ஹாஸ்பிடல் போய் பாருங்க என்று சொல்கிறாள், இதனால் ஆதி அப்செட்டாக இருக்க பாரதி என்னாச்சு என்று கேட்க ஆதிக்கு தனக்கு வந்த போன் கால் குறித்து சொல்லி அந்த குடும்பத்தை பார்க்க வருவதாக சொல்லி ஹாஸ்பிடல் கிளம்ப பாரதி நானும் வரேன் என்று கூட செல்கிறாள். 


டாக்டர் இவர்களை பார்த்ததும் வசுவின் மனைவி தானே பாரதி என புரிந்து கொள்கிறார். ஆதி எனக்கு இதயம் கொடுத்த பேமிலியை பத்தி தெரிஞ்சிக்கணும் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து பாரதிக்கு போன் கால் வர அவள் வெளியே எழுந்து வர டாக்டர் ஆதியிடம் அம்புலன்ஸ் ட்ரைவர் நம்பரை கொடுத்து இவரை போய் பாருங்க என்று சொல்லி அனுப்புகிறார். 


ஆதி அம்புலன்ஸ் ட்ரைவர் நம்பரை கொண்டு வந்து சரவணனிடம் கொடுத்து பேச சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ