இயக்குனர்கள் சங்கத் தேர்தல் இன்று காலை வடபழனியில் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும் இந்த தேர்தல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த இயக்குனர்கள் சங்கத் தேர்தலில் 3400 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதில் சுமார் 2300 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 


சென்னை வடபழனியில் உள்ள இசையமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 


தேர்தல் முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


இயக்குனர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் 


புதிய வசந்தம் அணி: தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு, துணைத் தலைவர்கள் கே.எஸ். ரவிக்குமார், ஆர்வி உதயக்குமார், இணைச் செயலாளர்கள் ரமேஷ் கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், அறிவழகன்.


புதிய அலைகள் அணி: பொருளாளர் ஆ.ஜெகதீசன், துணைத் தலைவர், வி.சுப்பிரமணியம் சிவா, இணைச் செயலாளர்கள் ஜி.ஐந்துகோவிலான், நாகராஜன், மணிகண்டன் பி.பாலமுரளிவர்மன் மற்றும் ஆ.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர்.