Idhayam Serial Latest Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் அழகர் ஆண்டாளை கடத்தி கொண்டு வந்து தம்பி பாண்டி முன்னாடி நிறுத்த அது அவனது காதலி இல்லை என்று தெரிய வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது அழகர் தப்பு நடந்து விட்டது, நானே உங்களை உங்க வீட்டில் விட்டுட்டு மன்னிப்பு கேட்டுட்டு வரேன் என்று அழகர் ஆண்டாளை அழைத்து கொண்டு அவளது ஊருக்கு வருகிறான். இங்கே ஊர் காரர்கள் ஆண்டாள் ஓடி போய் விட்டதாக அவளையும் அவளது குடும்பத்தையும் அவனமானப்படுத்த ஆண்டாள் அழகரை காதலிப்பதாக அவரை தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். இதை எதிர்பார்க்காத அழகரும் ஷாக் ஆகிறான்.


பிறகு ஊர் காரர்கள் அழகரை பிடித்து உட்கார வைத்து ஆண்டாள் கழுத்தில் தாலி கட்ட வைக்கின்றனர். பிறகு இவர்கள் வீட்டிற்கு வர ஆண்டாளின் அப்பா வீட்டிற்குள் சேர்க்காமல் அவளை தலை முழுக அவளது தங்கச்சி அப்பாவை சமாதானப்படுத்தி ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வருகிறாள்.


பிறகு பாரதி ஆண்டாளியிடம் உன் காதல் விஷயத்தை வீட்டில் சொல்லி கல்யாணமா செய்து இருக்கலாமே.. ஏன் டி இப்படி பண்ண என்று கேள்வி  கேட்க எனக்கே அவனை இன்னைக்கு தான் தெரியும். நானும் என் குடும்பமும் அவனமானப்பட்ட மாதிரி அவனும் அவன் குடும்பமும் அவமானப்படணும், அதுக்கு தான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன் என்று சொல்ல பாரதி அதிர்ச்சி அடைகிறாள்.


பிறகு அழகர் ஆண்டாளை சந்தித்து இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல நான் கட்டின தாலியை கழட்டி கொடுத்துடுங்க, வீட்டில் விஷயத்தை சொல்லி மன்னிப்பு கேட்டுட்டு போறேன் என்று சொல்ல ஆண்டாள் என் குடும்பம் அவமானப்பட்ட மாதிரி உன் குடும்பம் மொத்தமும் அவமானப்படணும். நீ அடிக்கடி அவனமானப்படணும் என்று சொல்கிறாள்.


பிறகு பாரதி அழகரிடம் பேசி அவனது தம்பி பாண்டி நம்பரை வாங்கி அவனுக்கு போன் செய்கிறாள், நடந்த விஷயத்தை சொல்ல பாண்டி பதற ஆதி போனை வாங்கி பேசுகிறான், ஆதியின் குரலை கேட்டதும் பாரதி அதிர்ச்சி அடைகிறாள். இருந்தாலும் ஆண்டாள் அழகர் கல்யாணம் குறித்து சொல்லி அவர்களை சேர்த்து வைக்க கிளம்பி வர சொல்கிறாள்.


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ