போலீசை வைத்து பதற விட்ட ஆதி.. துரைக்கு நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்
Idhayam TV Serial Today (05.08.2024) Episode: இன்றைய இதயம் சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
Tamil Serial Anna Latest Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் துரை காணாமல் போன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, ஆதி ரூமுக்குள் இருக்கும் போது அங்கு வந்த பாரதி துரை எங்கே? நீங்க தான் எதாவது பண்ணீங்களா என்று கேட்க எனக்கு தெரியாது என்று சொல்கிறான். பாரதி திரும்ப திரும்ப கேட்க ஆதி அதே பதிலை மீண்டும் சொல்கிறான்.
அடுத்து வீட்டிற்கு போலீஸ் வர ஆதி எங்க வீட்டு மாப்பிள்ளை துரையை காணோம், நீங்க தான் கண்டு பிடித்து தரணும் என்று கம்பளைண்ட் கொடுத்திருப்பது தெரிய வருகிறது. வீட்டிற்கு வந்த போலீஸ் ஸ்வேதா மற்றும் அறிவு மீது சந்தேகப்பட இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
போலீஸ் கிளம்பியதும் ஆதி வரட்டுமா என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர ஸ்வேதா எல்லாம் உன் புருஷன் பண்ண வேலை தானா என்று பாரதியை பார்த்து கோபப்பட சாரதா என் பிள்ளையை நான் அப்படி வளர்க்கல என்று பதிலடி கொடுக்கிறாள்.
அடுத்து அங்கு வந்த ஆதி துரை எங்கேன்னு எனக்கு தெரியாது, வேணும்னா போய் கார் டிக்கில தேடி பாருங்க என்று சொல்ல அறிவு மற்றும் ஸ்வேதா கார்களில் தேடி பார்க்கின்றனர். மறுபக்கம் ஒரு ட்ரைவர் ஹாயாக கார் ஒட்டி வர அவனை மடக்கி பிடித்து காரை சோதனையிட டிக்கியில் துரை கிடப்பது தெரிய வருகிறது.
ட்ரைவரை அடித்து விசாரிக்க அவன் இவர் எப்படி டிக்கியில் வந்தார்னு எனக்கு தெரியாது என்று சொல்கிறான், பிறகு துரையை தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரிக்க அவன் பிளாஷ்கட்டில் நடந்ததை நினைத்து பார்க்கிறான், அதாவது தமிழை கடத்த போக பின்னாடி வந்த ஆதி துரையை கடத்தியது தெரிய வருகிறது.
இதனால் துரை போலீசில் உண்மையை சொன்னா மாட்டிப்போம் என்பதால் எப்படி நான் இங்கே வந்தேன்னு தெரியல என்று சமாளித்து அங்கிருந்து வருகிறான், ஸ்வேதாவும் அறிவும் துரையை சந்தித்து என்னமோ பண்ணிடுவேன்னு வாய் கிழிய பேசுன.. என்னாச்சு என்று பிடித்து திட்டுகின்றனர்.
அடுத்து துரையுடன் வீட்டிற்கு வர சாரதா மாப்பிள்ளை எங்க போனாரு, எப்படி கண்டு பிடிச்சீங்க என்று விசாரிக்கிறாள். அடுத்து போலீஸ் வந்து துரையை விசாரிக்க அவன் தூங்கிட்டு இருக்கும் போது யாரோ 5 பேர் குண்டுக்கட்டாக தூக்கிட்டு போனதாக சொல்கிறான். அவங்க என்ன பேசிக்கிட்டாங்க என்று கேட்க இந்தியில் பேசுனாங்க எனக்கு புரியல என்று சமாளிக்கிறான்.
அதன் பிறகு ஆதி என் மாப்பிள்ளையை கடத்தியவன் யாருனு நீங்க தான் கண்டுபிடிக்கணும், இதுல ஏதோ ஒன்னு இருக்கு என்று கோர்த்து விடுகிறான், அடுத்து துரை நான் எவ்வளவோ பேருக்கு பயத்தை காட்டி இருக்கேன், ஆனால் இந்த ஆதி எனக்கே பயத்தை காட்டிட்டான் என்று புலம்புகிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க - மருதாணி செய்த மாயம்.. ரம்யா அதிர்ச்சி.. தீபா கேட்ட கேள்வி.. கார்த்திகை தீபம் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ