மாடலிங் உலகில் கொடிகட்டிப் பறந்த தான்யா ஹோப் கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் நடித்து வருகிறார்.  2015ஆம் ஆண்டு மிஸ் இந்தியா கொல்கத்தா பட்டத்தையும் வென்றார்.  2016 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான அப்பட்லோ  ஓகடுண்டேவடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  பெங்களூரில் பிறந்த இவர், இங்கிலாந்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கு திரையுலகில் அறிமுகமான தான்யா ஹோப் அருண் விஜய் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த  தசம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.  அதன்பின் ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு என்ற  படத்தில் நடித்தார்.  அவ்வப்போது தனது கிளாமர்  புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார் தான்யா ஹோப்.



குரானா காலகட்டத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் யாருக்கும் தெரியாமல் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில்,அசாதாரணமான  இந்த காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார் தான்யா ஹோப். குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும்விதமாக உணவளித்து வருகிறார். இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்து அந்த அந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறார். ஷைன் சில்டரன் ஹோம் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாக இருக்கிறார்.  தான்யா ஹோப்பின் இந்த தன்னலமற்ற சேவைக்கு பல்வேறு தரப்பிடமிருந்து பாராட்டு குவிந்துள்ளது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR