’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டீசர் வெளியீடு
ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை: ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
ஹைக் இயக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி, கோவை சரளா, மயில்சாமி, தேவதர்ஷினி, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை அட்லி தயாரிக்கிறார்.
இப்படம் திகில் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனம் படத்தின் வெளியிடுகிறது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.