தெலுங்கு திரையுலகின் ‘பவர் ஸ்டார்’ என அழைக்கப்படுபவர், பவன் கல்யாண். புகழ் பெற்ற நடிகராகவும் மக்களுக்கு பிடித்த அரசியல்வாதியாகவும் விளங்குகிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் எப்படி விஜய்-அஜித்தை காெண்டாடுகின்றனரோ அதே போல தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகர், பவன் கல்யாண். எப்போதும் இவர் குறித்த செய்திகள் சினிமா பக்கத்தின் தலையங்கங்களில் வருவது வழக்கம். இன்றும், இவர் குறித்த வைரல் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பவன் கல்யாண்:


தமிழில் வெளியான பல படங்களின் தெலுங்கு ரீ-மேக்கில் நடித்து பிரபலமானவர் பவன் கல்யாண். ஆரம்பத்தில் நடிகராக தனது ஒரு முகத்தை காட்டியவர், நாட்கள் செல்ல செல்ல தனது இன்னபிற முகங்களையும் காண்பிக்க ஆரம்பித்தார். சில படங்களை இயக்கி இயக்குநராகவும் ஜனசேனா எனும் கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் இவர் வலம் வருகிறார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி இவர். சமீபத்தில், தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக நவீன மையமாக்கப்பட்ட ஒரு வண்டியை உருவாக்கி அதில் பயணம் செய்ய தொடங்கினார். அந்த வாகனத்திற்கு ‘வராஹி’ என்றும் பெயர் வைத்தார். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து அவை வெற்றி பெறாத நிலையில் 10 வருடங்களுக்கு முன்னர் 3ஆவதாகா திருமணம் செய்து கொண்டார், 


மேலும் படிக்க | ‘தங்கலான்’ படப்பிடிப்பு நிறைவு..! எப்போது படம் ரிலீஸாகிறது தெரியுமா..?


திருமணங்களும் விவாகரத்துகளும்..


தெலுங்கு திரையுலகின் கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமன்றி, பெரிய காதல் மன்னனாகவும் வலம் வந்துள்ளார், பவன் கல்யாண். தனது முதல் படத்தில் நடித்துவுடன் 1997ஆம் ஆண்டு நந்தினி என்பவரை பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். பட வாய்ப்புகள் குவிந்து, பவன் கல்யாண் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த வேலையில் இவரது முதல் திருமணம் தோல்வி பாதையில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, இவர் 2004 ஆம் ஆண்டு தன்னுடன் நடித்த ரேனு தேசாய் என்ற நடிகையுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இவரது முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவருடன் கணவர் வாழ்ந்து வருவதாக கூறி பவன் கல்யாண் மீது வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து 2007ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர். பின்னர், நடிகை ரேனுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறக்க, 2012ஆம் ஆண்டு இருவர்ம் பிரிந்துவிட்டனர். 


மூன்றாவது மனைவி..


‘டீன் மஸார்’ என்ற படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது, இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஆனா லெஸ்வெனா என்பவரை சந்தித்துள்ளார். சில ஆண்டுகள் காதலித்த பிறகு இருவரும் 2013ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சிறப்பு திருமண சட்டத்தின் படி ஐதராபாத்தில் உள்ள சார்பதிவாளர்கள் அலுவலகத்தில் திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு தற்போது ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். 


இதுவும் விவாகரத்து..?


பவன் கல்யாண், தனது மூன்றாவது மனைவியான ஆனாவை பிறிந்து விட்டதாக தெலுங்கு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. பவன் கல்யாணின் மனைவி ஆனா, தற்போது சிங்கப்பூரில் தனது பிள்ளைகளுடன் சில ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர், சமீபத்தில் பிள்ளைகளுடன் ரஷ்யாவிற்கு சென்று விட்டதாகவும், பவன் கல்யாண் அடிக்கடி அவர்களுடன் வீடியோ காலில் உரையாடுவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை என்றாலும், ரசிகர்கள் இதனை உறுதியாக நம்புகின்றனர். காரணம், ‘மெகா’ குடும்பத்தின் பல விஷேஷங்களில் பவன் கல்யாணின் மனைவி கலந்து கொள்ளாததுதான், சமீபத்தில் ராம்சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடைப்பெற்றது. அதற்கு முன்னர் மெகா குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் லாவண்யா-தேஜ் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தமும் நடைப்பெற்றது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளிலும் பவன் கல்யாணின் மனைவி கலந்து கொள்ளவில்லை.


மேலும் படிக்க | விஜய்யை போல திடீரென்று இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய தென்னிந்திய பிரபலம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ