யு/ஏ சான்றிதழ்: தடைகளை தாண்டி நாளை முதல் மெர்சல்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் சமந்தா, காஜல், நித்யா மேனன் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இந்த படத்தை தேனாண்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளாது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
விலங்குகள் நல வாரியத்தின் அனுமதியை தொடர்ந்து விஜய் நடித்துள்ள மெர்சல் படத்துக்கு மத்திய தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் மெர்சல் திரைப்படம் நாளை வெளியாகிறது.
இந்நிலையில் மெர்சல் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை குழுவும் சான்றிதழ் அளித்துள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழுவின் சான்றிதழ் கிடைத்துவிட்டதால் திட்டமிட்டப்படி மெர்சல் திரைப்படம் நாளை வெளியாகிறது.