2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் படமான "நேர்கொண்ட பார்வை" படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்தப் படமான "தல 60" இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியானதை அடுத்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஏற்கவே #THALA60PoojaDay என்ற ஹேஷ் டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வந்தனர். இதனையடுத்து இன்று தல அஜித் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு "வலிமை" என்று பெயரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனைதொடர்ந்து அஜித் ரசிகர்கள் #Valimai என்ற ஹேஷ்டேக்-கை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.


 



தல அஜித் நடிப்பில் வெளியான "நேர்கொண்ட பார்வை" படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


வலிமை படத்தை நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத் தான் இயக்குகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.