ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஞானவேல்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்த சூழலில் தான் ரஜினிகாந்துக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வன்னியர் சங்கத்தினர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினி மீதான கோபத்துக்கு 20 ஆண்டுகால பகை தான் காரணம். அதாவது பாபா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக கர்நாடகா சென்ற ரஜினி, அங்கு பேசிய போது சந்தன கடத்தல் வீரப்பனை கொல்ல வேண்டும் என ஆக்ரோஷமாக பேசினார். இதற்கு பாமக தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. அதோடு வட தமிழகத்தில் பாபா படம் திரையிடுவதில் கடும் சிக்கல் எழுந்தது. இப்படி ஏற்கனவே வன்னியர்களுடன் கடும் மோதல் போக்கு ரஜினிக்கு இருந்து வருகிறது. 


மேலும் படிக்க | தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!


இது ஒரு பக்கம் இருக்க, ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற காலண்டருக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த விவகாரமும் பூதாகரமானது. வன்னியர்களை குற்றவாளிகள் போல் காட்டியதாக ராமதாஸ் தரப்பினர் கொதித்தெழுந்தனர். அதன்பிறகு அதற்கு இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்ததால் பிரச்சனை முடிந்தது. இதனால் வன்னியர்களுக்கும் ஞானவேலுக்கும் இடையே ஒரு பிரச்சனை உள்ளது. 



இப்படிப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த்தின் 170-வது படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். ஏற்கனவே பாபாவில் தொடங்கிய பிரச்சனையை மீண்டும் தோண்டி எடுத்து அதனை தலைவர் 170-ல் காட்டி வருகின்றனர் வன்னியர் சங்கத்தினர். எக்ஸ் தளத்தில் #vanniyarsboycottrajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. படம் தொடங்கும் போதே இவ்வளவு பிரச்சனைகள் உள்ளதால், வெளியாகும் போது என்னென்ன சிக்கல்கள் வருமோ என்று இப்போதே ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


மேலும் படிக்க | ‘தலைவர் 170’ டைட்டில் இதுதான்..! கசிந்தது ருசிகர அப்டேட்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ