மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படும். இந்த படத்தில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த் சுவாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார். இப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்கியுள்ளார். சிறிது நேரத்திற்கு முன்பு, எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமியின் படங்கள் வெளியாகின. எம்.ஜி.ஆருடன் மிகவும் ஒத்து இருக்கும் அரவிந்த சுவாமியின் தோற்றத்தைப் பார்த்து அனைவரும் வியந்தனர். 



தலைவி (Thalaivi) படத்தின் டிரெய்லர் கங்கனா ரனவுத்தின் பிறந்த நாளான மார்ச் 23 அன்று வெளியிடப்பட்டது. டிரெய்லருக்கு பல விதமான விமர்சனங்கள் கிடைத்தன. ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் காவியத் தலைவியாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது மிகவும் சவாலானதாக இருந்தது என்று கங்கனா ரனாவத் கூறினார்.


படத்தில், எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரகனி நடிக்கிறார். அரவிந்த் சுவாமிக்கு அடுத்ததாக கண்ணாடியுடன் அமர்ந்திருக்கும் சமுத்திரகனியின் புகைப்படத்தை குழுவினர் வெளியிட்டனர். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆனது, பரவலாகப் பரவியது.



படத்தின் முதல் பாடல் மழை, மழை நாளை வெளிவரவுள்ளது. இந்த பாடலில் வரும் கங்கனா ரனாவத்தின் (Kangana Ranaut) படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிரடியாக பிரபலமாகி வருகிறது.


ALSO READ: 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR