அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படத்தில் அவரது பெயர் என்னவென்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். 


இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 


இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியை எப்படி படமாக்கியுள்ளனர். அப்போது யோகி பாபு பேசும் வசனம் என்ன என்பது பற்றி இணையத்தில் செய்தியாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர தொடங்கினார்கள். 


இதைதொடர்ந்து இந்த படத்தைத் தயாரித்துவரும் ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில், “ரசிகர்களுக்குப் பெரிய வேண்டுகோள். ‘தளபதி 63’ தொடர்பாக எந்தவொரு தகவலையும் பகிர வேண்டாம். உங்களை மகிழ்விக்க படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.