ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது சென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது.  'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் 'லியோ' படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.  செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.  படத்தின் அதிகாரபூர்வ தலைப்பை அறிவிக்கும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது, இந்த வீடியோவை பார்த்ததிலிருந்தே படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் துடித்து வருகின்றனர்.  'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  மேலும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நேற்று படத்தின் அப்டேட்... இன்று பையனின் பெயர் அப்டேட் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அட்லீ!



நாளுக்கு நாள் 'லியோ' படம் பற்றிய பல்வேறு அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகின்றது.  'லியோ' படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸின் கீழ் வருமா அல்லது இது வேறு மாதிரியான படமாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  விக்ரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகரும், நடன கலைஞருமான ஜாபர் சாதிக், லியோ படத்தில் இணையப்போவதாக லேட்டஸ்ட் செய்திகள் வெளியானது.  அதற்கு முன்னர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சி மற்றும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம், மற்றும் பிக்பாஸ்-6 மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த ஜனனி போன்றவர்களும் 'லியோ' படத்தில் இணைவதாக செய்திகள் வெளியானது.  அதன் பின்னர் யாரும் எதிர்பார்த்திடாத வகையில் 'லியோ' படத்தின் தலைப்புக்கேற்ப இப்படத்தில் காட்டுக்கே ராஜாவான சிங்கம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியானது.  படத்தில் இந்த சிங்கம் தான் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்பட்டது.


மேலும் லியோ படத்தில் சிங்கத்தை உயிர்ப்பிக்கும் கிராஃபிக்ஸ் பணிக்காக படக்குழு ரூ.15 கோடி செலவு செய்திருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இப்படி படத்தில் நடிக்கப்போகும் நட்சத்திரங்கள் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில், லியோ படத்தில் இணையப்போகும் மற்றொரு பிரபலம் குறித்த செய்தியும் வெளியாகியுள்ளது.  வெளியான தகவலின்படி, வக்கீலாக இருந்து நடிகையாக மாறிய நடிகை சாந்தி மாயாதேவி 'லியோ' படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  தான் லியோ படத்தில் நடிக்கப்போகும் செய்தியினை உறுதிப்படுத்தும் விதமாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து இருக்கிறார்.  வக்கீலான இவர் மலையாளத்தில் மோகன் லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியான  'த்ரிஷ்யம் 2' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  தற்போது மோகன் லால் மற்றும் திரிஷா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகவுள்ள ராம் படத்திலும் சாந்தி மாயாதேவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


மேலும் படிக்க | Jawan Update: பொறுத்தது போதும்..வந்தாச்சு ஜவான் பட அப்டேட்..ரிலீஸ் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ