தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இருந்த இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அதிக வசூலை குவித்துள்ளது.  ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை தினங்களில் வெளியானதால் வார இறுதியில் நல்ல வசூலை பெற்றுள்ளது.  தற்போது, லியோ படம் ​​இரண்டாவது வார இறுதியை எட்டியுள்ள நிலையில், பாக்ஸ் ஆபிஸில் நிலைத்து நிற்கிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Leo Box Office Collection Day 8: முதல் வார வசூலில் சாதனை.. மாஸ் காட்டும் விஜய்யின் லியோ


'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் இரண்டாவது முறையாக இணைந்துள்ள 'லியோ', முதல் வாரத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடியை நெருங்கி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் லியோ படம் எட்டு நாட்களில் ரூ.266 கோடியை தொட்டுள்ளது. 9வது நாளில் ரூ.7 கோடியும், மொத்த உள்நாட்டு வசூல் சுமார் ரூ.273 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  இதற்கிடையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ. 500 கோடியை நெருங்கி வருகிறது, மேலும் இரண்டாவது வார இறுதிக்குள் இந்த சாதனையை முறியடிக்கும் என்று படக்குழு எதிர்பார்த்துள்ளது.  


'லியோ' ஏற்கனவே ஏழு நாட்களில் உலகளவில் 461 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிரகார்வப்பூர்வமாக அறிவித்து இருந்தது.  தமிழ் சினிமா வரலாற்றிலேயே அதிக மொத்த வசூல் என்று படக்குழு குறிப்பிட்டுள்ளனர்.  'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியான லியோ படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.  இந்த படத்தின் திரைக்கதை லோகேஷ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர். விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  


லியோ படம் வசூலை வாரி குவித்து கொண்டு இருக்கும் நிலையில், விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார்.  வெங்கட் பிறகு இயக்கும் இந்த படத்தை பிகில் படத்திற்கு பிறகு ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  லியோ படம் வெளியாகும் முன்பே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.  மேலும், லியோ படம் வெளியான பின்பு தளபதி 68 படம் பற்றிய கூடுதல் அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு கூறி இருந்தது.  அதன்படி லியோ படம் வெளியான பிறகு படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டது.  அதில் படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்கள் பற்றிய அறிவிப்பும் வெளியானது.  தளபதி 68 படத்தில் விஜய்யுடன், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, மோகன், அஜ்மல் அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கூடுதலாக, வெங்கட் பிரபுவின் நண்பர்களான வைபவ் ரெட்டி, பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.


மேலும் படிக்க | 5 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கும் விக்ரமன் மனைவி-கண்டுகொள்ளாத பிரபலங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ