தூத்துக்குடி சம்பவம் என நினைத்து பரமக்குடியில் நடந்த கலவர வீடியோவை மாத்தி பதிவிட்ட பிரபல நடிகை!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. 


இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் மனிதர்களை சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.


இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் என நினைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த கலவர வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் மாத்தி வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.


இதை கண்ட நெட்டிசன்கள் இவரை கலைத்து வருகின்றனர். வயதானவர் ஒருவரை பொலிசார் அடித்து நொறுக்கும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட அவர் "60 வயது பெரியவர் இடம் போலீஸ் நடந்துகொள்ளும் விதம்..." அதில் எழுதி பதிவிட்டுள்ளார். 



ஆனால், அவர் பதிவிட்டுள்ள வீடியோ தூத்துகுடி அல்ல, சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்த கலவரம். இதை கண்ட நெட்டிசன்கள் இப்படி தவறான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று அவரை கலைத்துள்ளனர்.