விஜய்யின் `மெர்சல்` விநியோக உரிமையை படநிறுவனம் கைப்பற்றியது
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படத்துக்கு ‘மெர்சல்’ படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கான விநியோக உரிமையை எம்.கே.எஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமிபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரிலீசாக இருக்கும் இப்படத்தை, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து வருகிறது.
இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'மெர்சல்' பாடல்கள் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அன்றைய தினமே டிரெய்லரும் வெளியாகும் என தெரிகிறது. மேலும் இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கான விநியோக உரிமையை எம்.கே.எஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனமே அதன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.