GOAT Movie Review In Tamil : வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). விரைவில் திரை உலகை விட்டு விலக இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட் வைக்கும் விதமாக தனது கடைசி படத்திற்கு முந்தைய படத்தில் தனது பழைய நகைச்சுவையான தோற்றத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ் மற்றும் டவிஸ்ட்கள் நிறைந்திருக்கிறது. பாடத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கதையின் கரு:


தளபதி vs இளைய தளபதி. சிங்கத்திற்கு அதன் குட்டியே எதிரியானால் எப்படியிருக்கும்? அவ்வளவு தாங்க தி கோட்


ஆரம்பமே அதிரடி.. மொத்தததுல சரவெடி…


தி கோட் படத்தின் முதல் காட்சியே யாரும் எதிர்பார்க்காத வகையில் இருக்கும் என பிரேம்ஜி சொன்னது சரியாக இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்று, ஆனால் திரையில் வேறு ஒன்றாக இருந்தது. ஆரம்பமே அதிரடியாக இருந்ததை தொடர்ந்து, அடுத்தடுத்த காட்சிகள் எதிர்பாராத வகையில் இருந்தது. ரயில் சண்டை காட்சிகளில் இருந்து, படத்தின் இடைவேளை காட்சி வரை அனைத்தும் திரையில் இருந்து கண்களை எடுக்க முடியாத படி இருந்தது. 


மேலும் படிக்க | எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா The GOAT படம்? ட்விட்டர் விமர்சனம் சொல்வது இதுதான்..!


இரண்டாம் பாதி கொஞ்சம் சொதப்பல்…


முதல் பாதி ஆக்ஷன் காட்சிகள், நகைச்சுவை மற்றும் குடும்ப காட்சிகள் நிறைந்ததாக இருந்தது. சினேகா-விஜய்க்கு இடையே கெமிஸ்ட்ரி இல்லை என்றாலும், ஓரளவிற்கு இருவரும் ஈடு கொடுத்து நடித்திருக்கின்றனர். இரண்டாம் பாதியில் இருவர் தொடர்பான காட்சிகள் மிகவும் குறைவு. கணவனாக, SAT குழுவின் முக்கிய உறுப்பினராக மாஸ் காட்டிய விஜய், அதே சமயத்தில் குறும்பு தனமும் செய்கிறார். முதல் பாதி சென்றதே தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி, எப்போது முடியும் என்பது போல இருந்தது. சண்டை காட்சிகள் ஆரம்பத்தில் ஆச்சரியத்தை கொடுக்க, பின்னர் அவையே வேக தடையாக அமைந்தது. 


விஜய்யின் பழைய பட reference மட்டுமன்றி, பல ஹீரோக்களின் படங்களின் டயலாக் மற்றும் பிற ஹீரோக்களின் படத்தின் referenceஉம் இருந்தன. இதனால் விஜய் மட்டுமன்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் ஹேப்பி. 


நிறை..குறை..


நீண்ட நாட்களுக்கு பிறகு, விஜய்யை ஜாலியான கதாப்பாத்திரத்தில் பார்ப்பது ரசிகர்கள் பலருக்கு மன நிறைவாக இருந்தது. ஆனால், அதுவே அவ்வப்போது கொஞ்சம் மிகையாக தெரிந்தது. பாடல்கள் மற்றும் நீலமான சண்டை காட்சிகள் வேக தடையாக இருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வாகவும், ஈர்க்காத படியும் செல்வதால் ரசிகர்கள் எப்போ படம் முடியும் என காத்துக்கொண்டிருந்தனர். 


பாத்திரங்களின் பங்கு: 


தி கோட் படத்தில் விஜய்யை தவிர இன்னும் சில முக்கிய கதாப்பாத்திரங்களும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் முழுக்க விஜய்யை வைத்து மட்டும்தான் கதை இயக்கப்பட்டிருக்கிறது. பிரசாந்த், அஜ்மல், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா ஆகியோருக்கு இன்னும் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கலாம். எதிர்பாராத சில நடிகர்களின் கேமியோக்கள் ரசிகர்களை வியப்படைய செய்தது. 


மொத்தத்தில்..


குடும்பததுடன் சென்று என்ஜாய் செய்து பார்க்க கூடிய வகையில் இருக்கிறது தி கோட் படம். இடைவேளைக்கு பின்பு கொஞ்சம் பொறுமை காத்தால் நிச்சயம் க்ளைமேக்ஸ் உங்களை கவரும். 


மேலும் படிக்க | கள்ளசந்தையில் விற்பனையாகும் GOAT டிக்கெட்! ஆதாரத்துடன் முறையிடும் ரசிகர்கள்! இவ்வளவு விலையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ