கன்னட சூப்பர் ஸ்டார் யாஷ் நடித்திருக்கும் கேஜிஎப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாகிறது. இப்படம் ரிலீஸாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே பாக்ஸ் ஆஃபீஸில் இரு படங்களும் மோத தயாராகியிருக்கும் இந்த சூழலில் கேஜிஎப் திரைப்படம் இப்போதே பல சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.அண்மையில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் சுமார் 109 மில்லியன் பார்வைகளை யூடியூப்பில் பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பேருந்து ஓட்டும் கேஜிஎஃப் ஹீரோவின் அப்பா - கோடிகளில் சம்பளம் பெறும் யாஷ்


இதுவரை ஒரு படத்தின் டிரெய்லர் இவ்வளவு முறை யூ டியூப் தளத்தில் பார்க்கப்பட்டத்தில்லை. அதாவது, முதன்முறையாக 109 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் பெற்ற டிரெய்லர் என்ற சிறப்பை கேஜிஎப் 2 பெற்றுள்ளது. ஆக்ஷன் பிளாக் பஸ்டராக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் பிரம்மாண்டத்தை டிரெய்லரில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சிகளும் பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு பிரேமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதால், நிச்சயம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே உலகம் முழுவதும் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸிலும் கேஜிஎப் 2 சாதனைகளை படைத்து வருகிறது. இப்படத்தை கேஜிஎப் முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கியிருக்கிறார்.



கடந்த ஆண்டே ரிலீஸூக்கு தயாராக இருந்த கேஜிஎப் 2, கொரோனா வைரஸ் காரணமாக பலமுறை ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. ஒருவழியாக ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இப்படத்துக்கு போட்டியாக ஒருநாள் முன்பே தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸாகிறது. இரு மிகப்பெரிய படங்கள் ரிலீஸ் குறித்து பேசிய கேஜிஎப் ஹீரோ யாஷ், படங்கள் வெளியாவது என்பது ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தான். இது ஒன்றும் தேர்தல் அல்ல. கேஜிஎப் 2 vs பீஸ்ட் இல்லை. இரண்டு படங்களையும் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அதற்காக தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என பதில் அளித்தார். அவருடைய இந்த பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.  


மேலும் படிக்க | பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுதான்! வெளியான தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR