ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் தொழிலதிபர் சரவணன் அருள் நடிப்பில் உருவான ஆக்ஷன் திரைப்படம் 'தி லெஜெண்ட்'.  இந்த  நடிப்பதற்கு முன்னரே சரவணன் அருள் மக்கள் மத்தியில் பிரபலமான முகம் என்பதால் இவரது படத்தை பலரும் பெரிய ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.  இந்த படத்தில் ஊர்வசி ரவுடலா, கீத்திகா திவாரி, பிரபு, சுமன், நாசர், விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு, வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, விஜயகுமார் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கலர்ஃபுல்லாக அமைந்திருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்திற்கும் வழக்கம்போல பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் என கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.  படம் ரொமான்ஸ், சண்டை காட்சிகள் மற்றும் சென்டிமெண்ட் என கலவையாக உருவாகியுள்ளது, நடிகர் சரவணனின் சில எமோஷன் சீன்களை இணையவாசிகள் பலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர், ஒரு பக்கம் அவரின் முயற்சியை சில ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.  'தி லெஜெண்ட்' திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.



மேலும் படிக்க | இன்று வெளியாகும் 4 தமிழ் படங்கள்!


இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவே அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.  கடந்த ஜூலை 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் வெளியான ஏழு நாட்களில் இந்திய முழுவதும் ரூ.4.73 கோடி பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியுள்ளது.  இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.45 கோடியாகும்.  மேலும் இந்த வாரமும் அண்ணாச்சி படத்திற்கு மக்கள் கூட்டம் வந்து கொண்டிருக்கிறது.


மேலும் படிக்க | வாரிசு படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ