தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கும் சிம்பு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.  கடந்த பொங்கல் தினத்தன்று சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  அதன்பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.  அப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து திரையில் வெளியிடுவதற்கான வேலைகள் இறங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது வெற்றிக் கூட்டணியான கௌதம் மேனன் சிம்பு இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.  இப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.  பின்பு சிம்புவின் வேண்டுகோளுக்கிணங்க கதையில் சிறிய சிறிய மாற்றங்கள் செய்ததால் இப்படத்தின் பெயர் மாற்றப்பட்டு சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.  ஜெயமோகனின் அக்கினி குஞ்சொன்று கண்டேன் என்ற நாவலை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து இருக்கிறார் கௌதம் மேனன்.  சமீபத்தில் சிம்புவிற்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து பிரச்சனை எழுந்து, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  அதன்பின் சிம்பு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தையில்  சுமூகமாக முடிந்து இன்றிலிருந்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. 


 




இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  இப்படத்தின் முதல் போஸ்டரில் சிம்பு வித்தியாசமான கெட்டப்பில் காணப்பட்டார். இதனால் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe