அஜித் 61 கதையை முதலில் கேட்ட ஹீரோ யார் தெரியுமா - விஜய் வெளியிட்ட தகவல்
ஏகே 61 கதை முதலில் மைக் மோகனிடம் கூறப்பட்டதாக ஹரா பட இயக்குநர் விஜய் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஹெச். வினோத் அஜித்தை வைத்து இயக்கிய வலிமை படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து மீண்டும் வினோத்தே அஜித்தை இயக்கிவருகிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுப்பதாக கூறப்படும் அஜித்தின் 61ஆவது படத்த்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. வலிமை சொதப்பியதால் இப்படத்தை ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற முனைப்பில் வினோத் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் இப்படத்தின் கதையை முதலில் ஹெச். வினோத் நடிகர் மைக் மோகனிடம்தான் சொல்லியதாக ஹரா படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரயில் எஞ்சினில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - கலக்கும் தென்னக ரயில்வே
விஜய் ஸ்ரீ தற்போது மோகனை வைத்து ஹரா என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பூ நடிக்கிறார். விஜய் ஸ்ரீ ஏற்கனவே தாதா 87, பவுடர் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நடித்துள்ள நஸ்ரியா!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR