கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் வருண் நடித்திருக்கும் தமிழ் திரைப்படம் 'ஜோசுவா இமை போல் காக்கா'.  இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் வருணுக்கு ஜோடியாக பிக் பாஸ்-1 டைட்டில் வின்னர் ஆரவின் மனைவி ராஹே நடித்துள்ளார்.  மேலும் இப்படத்தில் கிருஷ்ணா, யோகி பாபு, திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-ம் ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்து இருக்கிறார்.  விக்னேஷ் சிவன் எழுதிய இப்படத்தின் முதல் சிங்கிளான "ஹே லவ்" என்ற பாடல் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசானது.  இரண்டாவது சிங்கிளான "நான் உன் ஜோஷ்வா" என்ற பாடல் கடந்த ஜூலை மாதமும், முன்றாவது பாடலான 'தப்பாசு நேரம்' இந்த மாதம் ரிலீசானது. 


 



இயக்குனர் கௌதம் மேனன் படமென்றாலே தனி எதிர்பார்ப்பு இருக்கும், அந்த வகையில் இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இன்று இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸாகியுள்ளது.  இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.  அந்த ட்ரைலர் வீடியோவில் ஆரம்பத்தில் காதலிக்கு ஆறுதல் கூறும் வருண், எதிரிகளிடம் இருந்து தனது காதலியை மீட்க சண்டை இடுகிறார்.  இதில் திவ்யதர்ஷினி மாசான கெட்டப்பில் மிரட்டுகிறார்.  இப்படத்தில் அவர் காண்ட்ராக்ட் கில்லராக உள்ளார்.  காதல், ஆக்ஷன் என கலவையான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் வரவேற்பை பெற்றுள்ளது.  தற்போது வருண் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்-5 நிகழ்ச்சியில், போட்டியாளராக இருந்து வருகிறார்.  இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வருண் ஆர்மியை சேர்ந்த ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.


ALSO READ | நடிகர் வடிவேலுவை தொடர்ந்து இயக்குனர் சுராஜ்க்கும் கொரோனா!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR