OTT: செப்டம்பர் மாதத்தில் இவளோ படங்கள் ஓடிடி ரிலீசா?
செப்டம்பர் மாதத்தில் ஓடிடி தளங்களில் கிட்டத்தட்ட 15திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெளிவர உள்ளன.
செப்டம்பர் மாதத்தில் ஓடிடி தளங்களில் கிட்டத்தட்ட 15திற்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப்சீரிஸ்கள் வெளிவர உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பறவி திரையுலகை ஸ்தம்பிக்க வைத்தது. அதன் பிறகு ஓடிடி தளங்களின் ஆதிக்கம் உலகளவில் அதிகமானது. வீட்டிலிருந்தே திரைப்படங்களை பார்க்கும் பழக்கத்தை ஓடிடி தளங்கள் உருவாக்கி உள்ளனர்.
உலக அளவில் வெளிவரும் எந்த ஒரு திரைப்படம் மற்றும் வெப் சீரிஸ்களையும் நம் வீட்டில் இருந்தபடியே ஓடிடி தளங்களின் மூலம் பார்க்க முடிகிறது. இதனாலேயே தற்போது ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ் போன்ற மிகப்பெரிய ஓடிடி தளங்கள் அடுத்த மூன்று வருடத்திற்கு அவர்கள் டார்கெட் வைத்திருந்த பயனர்களை முதல் காலண்டிலேயே பெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்னிலையில் அடுத்த மாதம் கிட்டத்தட்ட 15-திற்கும் மேற்பட்ட மிகப்பெரிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஓடிடி தளங்களிள் வெளியாக உள்ளன. உலக ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மணி ஹேஸ்ட் சீசன் 5 முதல் பாகம் செப்டம்பர் 3-ஆம் தேதி வெளிவரவுள்ளது. அதன் தொடர்ச்சியாக லூசிபர் சீசன் 6, மேஸ்ட்ரோ, செக்ஸ் எஜுகேசன் சீசன் 3, பவுண்டேஷன், மும்பை டைரீஸ், கேட், மிட்நைட் மாஸ், ரா ரா, கொடா பேக்டரி சீசன்2, இன் டு த நைட் சீசன் 2 போன்ற வெப் சீரிஸ்கள் வெளிவர உள்ளன.
ALSO READ Thalapathy vijay: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விஜய்?
விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார், சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா, நானி நடிக்கும் டக் ஜெகதீஷ், மின்னல் முரளி, லவ் ஸ்டோரி போன்ற தென்னிந்திய படங்களும் செப்டம்பர் மாதம் ஓடிடியில் வெளிவர உள்ளன.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe