அனிமல் படத்தின் புதிய அப்டேட்: ரன்பீர் கபூர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் அனிமல் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனிமல் திரைப்படம்:
2017ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம், அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார். இவரது அடுத்த படைப்பாக உருவாகியுள்ளது, அனிமல். இந்த படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மேஉமி படத்தை T-Seiries மற்றும் Cine-1 Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. 


டிரைலர் மற்றும் டீசர்:
முன்னதாக இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோல் சமீபத்தில் வெளியான அனிமல் படத்தின் இரண்டு பாடகளுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இந்தப்பாடல்கள் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி முதல் பாடல் பெரும் கவனத்தை ஈர்த்ததற்கு காரணம், இந்தப் பாடல்களில் இடம்பெற்றிருந்த முத்தக் காட்சிகள் என்றே கூறலாம்.


இந்தி மொழியில் உருவாகியுள்ள அனிமல் திரைப்படம் (Animal) தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதில், ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியாவை சேர்ந்த தெலுங்கு மொழி பேசும் பெண்ணாக நடித்துள்ளார். 


மேலும் படிக்க | "தனி மனிதரைப் பற்றி தவறாக பேசினால் செருப்பால் அடிப்பார்கள்" - நடிகை ரோஜா


அனிமல் படத்தின் கதை:
அனிமல் படத்தில், அப்பாவால் அடித்து சித்தரவதை செய்யப்பட்ட மகன், கேங்க்ஸ்டராக மாறி, பின்பு சைக்கோவாக மாறுவது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில், ஹீரோ ரன்பீர் கபூருக்கு தந்தையாக அனில் கபூர் நடித்துள்ளார். டிரைலரில் காண்பித்த காட்சிகளின் படி, கண்டிப்பான தந்தையால் பணக்கார குடும்பத்தில் வளரும் ஹீரோ, வளர்ந்த பின்பு கொள்ளை கூட்டத்தின் தலைவனாக மாற்றப்படுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடைசியில் ஹீரோ, போலீஸாரால் சுட்டு வீழ்த்தப்படுவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. இதனால், படத்தின் இறுதியில் ரன்பீர் கபூர் இறந்து விடுவார் என்று கூறப்படுகிறது.


மூன்றாவது பாடல்:
இந்நிலையில் சற்று முன் அனிமல் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ("நீ என் உலகம்") வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர் மற்றும் அனில் கபூரின் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள பிணைப்பின் உணர்வுபூர்வமான ஆழம், அனிமல் திரைப்படத்தின் புதிதாக வெளியிடப்பட்ட மூன்றாவது பாடலில் மையமாக உள்ளது. ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசைமைத்துள்ள இந்த பாடலை சோனு நிகம் பாடியுள்ளார், மேலும் மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.




மேலும் படிக்க | லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ