Legend Saravanan படத்தின் கதாநாயகி இவர்தான்: விரைவில் வெளிவருகிறது படம்!!
லெஜண்ட் சரவணன், தனது பிராண்டின் விளம்பரங்களுக்காக, பிரபலங்களை நடிக்க வைக்காமல், தனது கடையின் விளம்பரங்களில் தானே நடித்துள்ளார். இதனால் அவர் நடிப்பிற்கு புதியவரல்ல.
சரவணா ஸ்டோர்சின் லெஜண்ட் சரவணன் தமிழ் திரையுலகான கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அவர் தனது பிராண்டின் விளம்பரங்களுக்காக, பிரபலங்களை நடிக்க வைக்காமல், தனது கடையின் விளம்பரங்களில் தானே நடித்துள்ளார். இதனால் அவர் நடிப்பிற்கு புதியவரல்ல.
அவரது முதல் திரைப்படத்தின் அறிவிப்பு 2019 ஆம் ஆண்டிலேயே வந்தது. திரைப்படம் 2020 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த திட்டங்கள் எதுவும் நடக்க முடியாமல் போயின. சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் வழங்கும் ‘பிரொடெக்ஷன் நம்பர் 1’ மூலம், லெஜண்ட் சரவணன் (Legend Saravanan) நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தை ஜெடி ஜெர்ரி ஜோடி எழுதி இயக்கவுள்ளார்கள். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் (Harris Jayaraj) இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அறிமுக நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.
ALSO READ: Viral Video of Legend Saravanan: லெஜண்ட் சரவணன் படத்தின் ஆக்சன் காட்சி படப்பிடிப்பு!
சில நாட்களுக்கு முன்பு, லெஜண்ட் சரவணன் சண்டை இடுவது போன்ற சண்டைக் காட்சியின் படங்கள் வைரலாகின. இப்போது பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடேலா இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஊர்வசி ரௌடேலாவும் இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகையான ஊர்வசி ரௌடேலா (Urvsahi Rautela), பாலிவுட் டீவா 2015 போட்டியின் வெற்றியாளராவார். மேலும், மிஸ் யுனிவர்ஸ் 2015 உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார். ஊர்வசி, ஹேட் ஸ்டோரி 4, கிராண்ட் மஸ்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
ALSO READ: குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR