This Week OTT Releases: இந்த வாரம் OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யத் தயாராக உள்ள படங்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது, எப்பொழுது வெளியாகும் போன்ற விவரங்கள் அறிந்துக்கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்களை மகிழ்விக்கவும், நேரத்தை பூர்த்தி செய்வதற்காக வெளியாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் ஸ்டோரி குறித்து பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயிலர் (செப்டம்பர் 7) - ஸ்ட்ரீமிங்: பிரைம் வீடியோ 
மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரஜினிகாந்தின் 169வது படமான இது ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியானது.



'ஐ ஆம் க்ரூட்' சீசன் 2  (செப்டம்பர் 6) - ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
ஐ ஆம் க்ரூட்' இன் இரண்டாவது சீசன் செப்டம்பர் 6 அன்று டிஸ்னி+ இல் திரையிடப்படுகிறது.



தி லிட்டில் மெர்மெய்ட் (செப்டம்பர் 6) - ஸ்ட்ரீமிங்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 
டிஸ்னியின் அனிமேஷன் கிளாசிக்ஸின் லைவ்-ஆக்ஷன் ரீமேக்குகளின் பட்டியலில் சமீபத்திய பதிவு, தி லிட்டில் மெர்மெய்ட், சாகச தேவதை மற்றும் கிங் ட்ரைட்டனின் இளைய மகளான ஏரியலைப் பின்தொடர்கிறது. இந்த படம் செப்டம்பர் 6 ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்படுகிறது.



ஹட்டி (செப்டம்பர் 7) - ஸ்ட்ரீமிங்: ஜீ5
இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் நவாசுதீன் சித்திக் இணைந்து நடித்துள்ள "ஹட்டி" படம் செப்டம்பர் 6 ஆம் தேதி  ZEE5 இல் ஒளிப்பரப்படுகிறது.



மேலும் படிக்க - 31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா


குங் ஃபூ பாண்டா: தி டிராகன் நைட் சீசன் 3 (செப்டம்பர் 7) - ஸ்ட்ரீமிங்: நெட்ஃபிக்ஸ்
ஹார்லி க்வின் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு சீசன் மூன்று இறுதியாக வெளியாகிறது நாளை மறுநாள் செப்டம்பர் 7 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



டாப் பாய் சீசன் 3 (செப்டம்பர் 7) - ஸ்ட்ரீமிங்: நெட்ஃபிக்ஸ்
போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருக்கும் ஆபத்தான பகுதியில் நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்களுக்கும் இடையிலான மோதல்களில் குறித்து சீசன் பேசுகிறது. இந்த டாப் பாய் சீசன் 3 செப்டம்பர் 7 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



விர்ஜின் ரிவர் சீசன் 5 பகுதி 1 (செப்டம்பர் 7)
நெட்ஃபிக்ஸ் விர்ஜின் ரிவர் தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



மேலும் படிக்க - பாலியல் சார்ந்த புரிதலுக்கு ஓடிடியில் பார்க்க வேண்டிய 7 சீரிஸ்கள் இதோ!


சிட்டிங் இன் பார் வித் கேக் (செப்டம்பர் 8) - ஸ்ட்ரீமிங்: பிரைம் வீடியோ
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



தி ப்ளாக் டேமூன் (செப்டம்பர் 8) - ஸ்ட்ரீமிங்: லயன்ஸ்கேட் ப்ளே
மூர்க்கமான மெகலோடான் சுறா வடிவத்தில் ஆபத்து வருகிறது. எப்படி தங்கள் குடும்பத்தை நாயகன் காப்பாற்றினார் என்பது தான் கதை. இந்த படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி லயன்ஸ்கேட் ப்ளே ஓடிடி தளத்தில் வெளியாகுகிறது.



தி சேஞ்சலிங் (செப்டம்பர் 8) - ஸ்ட்ரீமிங்: ஆப்பிள் டிவி
2017 ஆம் ஆண்டு வெளியான விக்டர் லாவல்லே நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு உளவியல் த்ரில்லர் படம் தான் தி சேஞ்சலிங். இந்த படம் செப்டம்பர் 8 ஆம் தேதி ஆப்பிள் டிவி+ தளத்தில் வெளியாகுகிறது.



மேலும் படிக்க - சினிமா சூப்பர் ஸ்டார்களை திவாலாக்கிய மும்பையின் ராசியில்லாத “பங்களா”!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ