நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக எனிமி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அவன் இவன் படத்துக்குப் பிறகு விஷால், ஆர்யா இணைந்து நடித்து வரும் படம், எனிமி ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மினி ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வினோத் குமார் படத்தை தயாரித்துள்ளார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களின் இயக்குனர் ஆனந்த் சங்கர் எனிமியை (Enemy) எழுதி இயக்கியுள்ளார். எனிமியில் விஷால் (Vishal), ஆர்யாவுடன் (Arya) மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஆர்.டிராஜசேகர் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்தது.



ALSO READ | திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த ஷாக்


இதற்கிடையில் சென்னையில் எனிமி படக்குழு புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு, ஐதராபாத்தில் பட வெளியீட்டு நிகழச்சிகளில் பங்கேற்றது. 


இந்நிலையில் தற்போது நடிகர் விஷால் தன் நெடுநாள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பதி பெருமாளை தரிசிக்க சென்றுள்ளார். கடந்த வருடமே திருப்பதி சென்று கடவுளை தரிசிக்க திட்டமிட்டிருந்தார் ஆனால் கொரோனா (Coronavirus) பொதுமுடக்கம் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. திருப்பதி (TTD) சென்ற அவர் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.


 



ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!