லோக்கலாக மாறும் சிவகார்த்திகேயன்! முழு விவரம் உள்ளே!!
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயந்தாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயந்தாராவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சீமராஜா படத்துக்கு பிறகு எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
தற்போது வரை SK13 என அழைக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மிஸ்டர் லோகல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து கோடை விடுமுறையான ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.