சீயான் விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் விக்ரமின் 58 வது படமாக உருவாகி வருகிறது. இன்னும் படத்துக்கான தலைப்பு குறித்து படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிக்கவில்லை. ஆனால் "விக்ரமின் 58" படத்தில் தலைப்பு "கோப்ரா" என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு "அமீர்" என்று படடைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அப்போது அதை படக்குழு மறுத்தது. தற்போது "கோப்ரா" என்ற பெயர் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2020 ஆங்கில புத்தாண்டு அன்று (ஜனவரி 1) இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்று தான் தெரியவரும் படத்தின் உண்மையான தலைப்பு என்னவென்று...


இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 


"விக்ரம் 58" படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்தது "பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம்.