நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சூர்யா உடன் நடிக்க வேண்டும் என்ற இவரது சிறிய வயது சபதம் நிறைவேறியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். மேலும் சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்‌ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்தான சூர்யாவின் அடுத்த ஜோடி?


இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யாவின் பிறந்த நாளான அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் டிசர் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.


தானா சேர்ந்த கூட்டம்: தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாருக்கு?


இதனையடுத்து இன்று தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முழு ஆல்பம் வெளியாக உள்ளது. இந்தப் படம் தமிழர் திருநாளான பொங்கல் அன்று திரைக்கு வருகிறது.