துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை திரிஷா.. என்ன அழகு டா
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷா, தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பதிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிஷாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியாகி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை த்ரிஷா:
தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளவர் நடிகர் த்ரிஷா. இவர் முதல் முதலில் கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2000 ஆம் ஆண்டு ரிலீஸான சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் ஹீரோயாக அறிமுகமார். இதே ஆண்டில் பல ஹிட் படங்களை கொடுத்து அனைவரின் கனவுக்கன்னியாக மாறினார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். அதுவும் 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் ஒரே கதாநாயகி நடிகர் த்ரிஷா ஆவார்.
மேலும் படிக்க | சிவகாரதிக்கேயன் பட இயக்குநருடன் இணையும் தனுஷ்.. இதோ லேடஸ்ட் அப்டேட்
15 வருடத்திற்கு பிறகு இணைந்த த்ரிஷா - விஜய்:
இதனிடையே 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கில்லி திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக த்ரிஷாவுடன் இணைந்து நடித்தார் விஜய். அதன்பிறகு இவர்கள் இருவரும் திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்களில் நடித்தனர். இதன் மூலம் இவர்களின் கெமிஸ்ட்ரி திரைப்படகளில் நன்கு ஹிட்டானது. இதன் பிறகு சுமார் 15 வருடத்திற்கு பிறகு விஜய் த்ரிஷா ஜோடி லியோ படத்தில் ஒன்றனது. கடந்த ஆண்டு வெளியான இப்படம் இவரிகளின் கம்பேக் படமாக அமைந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இவர்களின் கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பியது, அதுவும் படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஆறுதல் சொல்லி லிப்கிஸ் அடிக்கும் காட்சி செம வைரலானது.
12 ஆண்டுக்கு பின் ஒன்றாக த்ரிஷா - அஜித்:
மறுபுறம் தமிழ் சினிமாவின் மற்றொரு ஹிட் ஜோடியான த்ரிஷா மற்றும் அஜித் தற்போது 12 ஆண்டுக்கு பிறகு ஒன்றாகு நடித்து வருகின்றனர். அதன்படி த்ரிஷா தற்போது அஜித் உடன் ’விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குகிறார். முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அஜித், த்ரிஷா இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரின் காம்போ ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாப் ஹீரோக்களுடன் த்ரிஷா:
தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நடிகர் த்ரிஷாவின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அதுவும் தொடர்ந்து டாப் ஹீரோகளுக்கு ஜோடியாக இவர் கமிட்டாகி வருகிறார். அதன் படி விஜய், அஜித்தை தொடர்ந்து இவர், கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’ படத்திலும், மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ படத்திலும், நிவின்பாலுடன் ‘ஐடெண்டிட்டி’ படத்திலும், நடிகர் சிரஞ்சீவியுடனும் நடிக்கிறார்.
மேக்கப் இல்லாமல் நடிகை த்ரிஷா:
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் நடிகைகளின் ஒருவரான த்ரிஷா, தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் அல்லது வீடியோகளை அவ்வப்போது பதிவித்துக் கொண்டே தான் இருப்பார். அந்த வகையில் தற்போது நடிகை த்ரிஷா துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதுடன், பலர் 40 வயதிலும் இவ்வளவு அழகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி! எந்த படத்திற்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ