பிகில்-ஐ BEAT செய்ய முடியாத வலிமை டிரெய்லர்..!
வலிமை டிரெயலர் 15 மில்லியன் பார்வைகளை கடந்து சென்றிருந்தாலும், பிகில் டிரெய்லரின் ஒரு சாதனையை நெருங்க முடியவில்லை.
பொங்கல் விருந்தாக இந்தாண்டு திரைக்கு வரும் வலிமை (Valimai) படத்தை தியேட்டரில் காண ரசிகர்கள் பேரார்வத்துடன் இருக்கின்றனர். நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்பட்டத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. யூ டியூப்பில் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே மில்லியன் பார்வைகளைக் கடந்த வலிமை டிரெய்லர் (Valimai Trailer), படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
ALSO READ | RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் அஜித், டிரெய்லரில் பேசும் வசனங்களும் சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு மணி நேரத்தில் 8 மில்லியன் வியூஸ்-ஐக் கடந்த டிரெய்லர், இப்போது 15 மில்லியனைக் கடந்துள்ளது. இது பல்வேறு சாதனைகளை படைத்துக் கொண்டிருந்தாலும், இளைய தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் செய்த சாதனையை பீட் செய்ய முடியவில்லை.
ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு...!
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன், அதாவது பத்து லட்சம் லைக்குகளை வாங்கியது. அந்த சாதனையை வலிமை டிரெய்லர் உடைத்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் லைக்குகளை பெற்ற டீசர் என்ற சாதனையுடன் விஜயின் பிகில் டீசர் முதல் இடத்திலேயே இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR