H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தமிழில் வரவிருக்கும் படம் 'வலிமை".  இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, பாவெல் நவகீதன், யோகி பாபு மற்றும் அச்யுத் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.  நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து H.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் தான் வலிமை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி


இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் இப்படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.  மேலும் யுவன் ஷங்கர் ராஜா- அஜித் கூட்டணியில் பில்லா மற்றும் மங்காத்தா போன்ற படங்களில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்திலும் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.


இதனையடுத்து சமீபத்தில் வலிமை படத்தின் முதல் சிங்கிள் "நாங்க வேற மாறி" என தொடங்கும் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  அதன் பின்னர் அடுத்த அப்டேட்டாக சில தினங்களுக்கு முன்னர் இரண்டாம் சிங்கிள் குறித்த ப்ரோமோ வெளியானது.  அதன்படி இன்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியானது.



"நான் பார்த்த முதல் முகம் நீ! நான் கேட்ட முதல் குரல் நீ! " என்று அஜித் கூற "நான் பார்த்த முதல் முகம் நீ! நான் கேட்ட முதல் குரல் நீ! " என்கிற இந்த பாடல் ஆரம்பமாகிறது.  பிரசவித்தது முதல் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தை வளரும் ஒவ்வொரு நிலையிலும் தாய் எப்படி அரவணைக்கிறாள் என்பதை கூறும் வித்தாக இப்பாடல் அமைந்துள்ளது.  யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்க, விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுத, இந்த பாடலை  பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.  இந்த பாடல் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது.


 



ALSO READ தொடர்ந்து ஸ்டார் ஹீரோ படங்களை வாங்கி குவிக்கும் NETFLIX!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR