கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட தல அஜித்தின் வலிமை திரைப்படம் 2021 பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்றுநோய் காரணமாக, வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வந்த திரைப்படமான வலிமையின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது முழு அடைப்பு சில தளர்வுகளுடன் நீக்கப்படவுள்ள நிலையில் வலிமை திரைப்படத்தின் படபிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை திரைப்படத்தின் படபிடிப்பு வேலைகள் விரைவில் முடியும் பட்சத்தில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும், தற்போது திரைப்படம் பொங்கல் வெளியீட்டிற்கான பாதையில் உள்ளது என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார்.


இயக்குனர் வினோத்தின் இரண்டாவது படம் தீரன் ஆதிகாரம் ஒன்று திரைப்படம் வெளியான உடன், அவர் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்காக நடிகர் அஜித் குமாரை அணுகியதாக தெரிகிறது. இருப்பினும், இந்த திட்டத்தை அஜித் நிராகரித்தார், அதற்கு பதிலாக இந்தி திரைப்படமான பிங்க் (2016)-ஐ தமிழில் ரீமேக் செய்யும் பணியில் ஈடுபடுமாறு இயக்குனரிடம் கேட்டுக்கொண்டார். நேர்கொண்ட பார்வை என அறியப்படும் இந்த திரைப்படத்தின் தயாரிப்பின் போது, ​​தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் ஆகியோருடன் மற்றொரு தமிழ் படத்திற்காக மீண்டும் ஒத்துழைப்பதாக அறிவித்தார். 


படத்தின் தயாரிப்பாளர் கபூர் இந்த படம் குறித்து தெரிவிக்கையில் இது ஒரு த்ரில்லராக இருக்கும், இது நடிகரின் வேகத்தை மையமாக கொண்டது என தெரிவித்திருந்தார். அக்டோபர் 2019 -ல், படம் தொடங்கப்பட்டது மற்றும் தயாரிப்பின் தொடக்கத்தைக் குறிக்கும் விழா நடைபெற்றது.  எனினும் தற்போது கொரோனா முழு அடைப்பு காரணமாக படம் பாதில் நிற்கிறது.


இதற்கிடையில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படம் பொங்கலுக்காக திரைக்கு வரும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 


முன்னதாக இதேப்போன்று இரு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் (விஸ்வாசம் மற்றும் பேட்ட) கடந்த பொங்கல் 2019-ல் வெளியாகின. இரண்டு படங்களும் ரூ.200 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ரொக்க பதிவேடுகளை அமைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.